தழிழ் மக்களின் கல்வியறிவை வளர்ப்பதற்கு அமெரிக்க என்றும் உறுதுணையாக நிற்கும் என இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜெ.சிசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண நூலகத்திற்கு இன்று (19) விஜயத்தை மேற்கொண்ட அவர் யாழ்நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தெற்காசியாவில் சிறந்த நூலகமாக கருதப்பட்ட நூலகத்தை பார்த்தமையைநான் பெருமையாக நினைக்கின்றேன். யாழ்.குடநாட்டில் முதல் தடவையான எனது பயணம் அமைந்துள்ளது.
இதில் மக்களின் உண்மையான அன்மைப் பெற்றிரக்கின்றேன் என நினைக்கின்றேன். கல்வியில் யாழ்.மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புலமையடைய அமெரிக்கா தன்னாலன உதவிகளைச் செய்வதற்கு தயாராக இருக்கின்றது
பெருமையான இந்த நூலகம் தீவைக்கப்பட்டமையானது மிகவும் வேதனையான விடயம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நான் நினைகக்கின்றேன் என்றார்
இந்த நிகழ்வில் யாழ்.மாநாகர முதல்வர், பிரதம நூலகர் மற்றும் நூலக ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக