இலங்கையர்கள் தமிழ்நாட்டுக்கு செல்வது தொடர்பான பயண எச்சரிக்கையில் மாற்றமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அண்மையில் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா கோயில் நிகழ்விற்குச் சென்ற தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழ் அமைப்புக்களின் போராட்டத்தையடுத்து வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் பயணித்த வாகனமும் கல் வீசித் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது.
இதனையடுத்து இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு இலங்கைப் பிரஜைகள் செல்வது ஆபத்தானது என அண்மையில் வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும் இந்த பயண எச்சரிக்கையை தற்போதைக்கு தளர்த்தப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த பயண எச்சரிக்கையானது ஒரு தடை உத்தரவாக கருதப்பட முடியாது. எனினும் தமிழகத்திற்கு செல்கின்ற மக்களை விழிப்படையச் செய்யும் வகையிலேயே இப் பயண எச்சரிக்கை அமையும் எனவும் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் தென்னிலங்கையில் இருந்து 184 பேர் யாத்திரைக்குச் சென்றவர்களை திருப்பி அனுப்புமாறும் தமிழகத்தில் பல கட்சிகள் வற்புறுத்தியதற்கு இணங்க அவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனையடுத்து இவர்கள் அனைவரையும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
அதன்படி 4ஆம் திகதி அதிகாலை இவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர் . அதன்போதும் அவர்கள் வந்திருந்த பஸ் வண்டி இடை மறித்து கல்வீசித் தாக்குதல் நடாத்தப்பட்டது.
அதனையடுத்தே தமிழகம் செல்லும் இலங்கையர்கள் விழிப்புடன் செயற்படுமாறு பணய எச்சரிக்கையினை இலங்கை அரசு விடுத்துள்ளது.
எனினும் தமிழகத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டதற்கு அரசியற் கட்சிகள் பல கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை இலங்கை அரசு எதுவிதமான கண்டனங்களையும் வெளியிடவில்லை என பல கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக