புதன், 5 செப்டம்பர், 2012

மகிந்தவின் கைப்பொம்மை பிள்ளையான் மீண்டும் முதலமைச்சர் என்பது அறியாமை

கிழக்கு மாகாண சபையை தொடர்ந்து நடாத்த முடியாமல் அதன் ஆயுட்காலதிற்கு ஒரு வருடம் முன்னதாகவே கலைத்துவிட்ட முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மீண்டும் முதலமைச்சராக வர நினைப்பது அவரின் அறியாமையே என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு வேட்பாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதியில் கல்லாறு கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் காணி ஆணையாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய குருநாதன் மேலுள்ளவாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
கடந்த 4 வருடங்களாக கிழக்கு மாகாணசபை நிருவாகத்தை நடாத்திய பிள்ளையான் தலமையினாலான குழுவினருக்கு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பற்றியோ அல்லது அது சம்பந்தமான சட்டங்களைப் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற காணி சவீகரிப்புகள் அல்லது அத்துமீறிய குடியேற்றங்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் இவர்களால்
மேற்கொள்ளப்படவில்லை மாறாக இந்த அத்துமீறி குடியேறிய வேற்று இன மக்களுக்கு வேண்டிய உதவிகளையே இவர்களால் செய்ய முடிந்தது
மேலும் கிழக்கு மாகாண சபையை தொடர்ந்து நடாத்த முடியாமல் அதன் ஆயுட்காலதிற்கு ஒரு வருடம் முன்னதாகவே கலைத்துவிட்ட முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மீண்டும் முதலமைச்சராக வர நினைப்பது அவரின் அறியாமையே
கிழக்கு மண்ணை மீட்பதற்காக சபதமிட்டு தனியான கட்சி ஒன்றையும் தொடங்கிய இவர்கள் தங்களது கட்சியையும் தமது சின்னமான படகையும் தொலைத்தவர்களாக வெற்றிலைச் சின்னத்திடம் தஞ்சமடைந்துள்ளனர்
எனவே தமது கட்சியையே பாதுகாக்க முடியாத இவர்கள் எவ்வாறு கிழக்கு மக்களைக் காப்பாற்ற முடியும்? கடந்த 4 வருடங்களாக கிழக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதிகளை பெரும்பாண்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இப்போது சொல்கிறார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முடிந்தால் போய் எல்லைக் கிரமங்களில் வசிக்கட்டும் பார்க்கலாம் என்று இது என்ன நியாயம் எல்லைக் கிராமங்களே அபகரிக்கப்பட்ட நிலையில் நாங்கள் போய் எவ்வாறு அங்கு வசிப்பது
மேலும் எமது நாட்டின் தலைவர் எம்மைப் பார்த்து எமது மக்களைப் பார்த்து முதலாவதாக ‘நான் உங்கள் நண்பன்’ என கூறுகின்றார் அவர் எமது நண்பர் என்றால் உயிர் காப்பான் நண்பன் என்பதற்கிணங்க எம்மைப் பாதுகாத்தாரா மாறாக எமது உயிர்களை பலியெடுத்தார் அடுத்ததாக சொல்கின்றார் ‘நான் உங்களில் ஒருவன்’ என்று ஆனால் வன்னியில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை அவர் கண்டுகொள்ளவில்லை இறுதியாகச் சொல்கின்றார் ‘நான் உங்கள் நம்பிக்கைக்குரியவன்’ என ஆனால் தான் வழங்குகின்ற வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றமாட்டார் இடம் பெயர்ந்த சம்பூர் மக்களை 4 வருடங்கள் கடந்தும் இன்னும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றவில்லை இவர்தானா எமது நம்பிக்கைக்குரியவர்
எனவே அன்பார்ந்த தமிழ் மக்களே ஏமாற்றுப் பேர்வழிகளை நம்பி நாம் ஏமாற போகின்றோமா அல்லது எமது உரிமைப் போராட்டத்தில் வெற்றிபெற்று எம்மை நாமே ஆழப் போகின்றோமா தீர்மானிப்பது நீங்கள்தான்
உங்கள் வாக்கு அனைத்தையும் முழுமையாக த.தே.கூட்டமைபிற்கு அளித்து தமிழன் வெற்றி பெற வழிகோலுங்கள் என அவர் மேலும் தெரிவித்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக