புதன், 12 செப்டம்பர், 2012

கைதிகள் மோதல்! அதிகாரிகள் இருவர் வைத்தியசாலையில்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று முற்பகல் இரு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றை விலக்கச் சென்ற அதிகாரிகள் இருவர் கைதியொருவரால் கடுமையால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளான எம்.ஏ.பண்டார மற்றும் கதிகரன் ஆகிய இருவருமே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகளுக்கு இடையே மோதலொன்று இடம்பெற்றுள்ளது.
அவர்களுக்கிடையிலான மோதலை தடுக்க முற்பட்ட போதே மேற்படி இரு அதிகாரிகளும் மோதலில் ஈடுபட்ட கைதியொருவரால் தாக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
மேற்படி சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக