தனி விமானத்தில் பிரித்தானிய - கனேடிய அதிகாரிகள் வடபகுதிக்கு பயணம்! - சிறிலங்கா அரசினது திட்டம் தவிடுபொடி.
கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் 58வது அமர்வில் பங்கேற்க வந்த பிரித்தானிய மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்குச் செல்வதற்கு பிரித்தானிய தூதரகம் ஏற்பாடு செய்தது சிறிலங்கா அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா அரசாங்கம் அவர்களை, போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும், கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் சுதந்திரமான முறையில் அவர்கள் சென்று வருவதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது,
தனி விமானத்தில் பிரித்தானிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அனுமைதி கோரியது சிறிலங்கா அரசுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திய போதும், வேறு வழியின்றி அதற்கு பச்சைக்கொடி காண்பித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரச அதிகாரி ஒருவர், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி இன்னமும் சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள முனைவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்காவை இலக்கு வைத்து, கொமன்வெல்த் அமர்வுகளின் போது புதிய குற்றச்சாட்டுகளை தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தமாதம் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலும், வரும் நவம்பரில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளை அவர்கள் தீவிரப்படுத்தக் கூடும் என்றும் அவர் மேலம் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக