செவ்வாய், 25 செப்டம்பர், 2012

காணாமல் போனோர் தொடர்பில் மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை: நிமால் சிறிபால

காணாமல் போனோர் தொடர்பில் மேற்குலக நாடுகள் செய்து வரும் பிரசாரம் அடிப்படையற்றது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயிரக் கணக்கான உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர். மேற்குலக நாடுகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் மூலம் புலனாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதிநிதிகளை நியமிக்காத காரணத்தினால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகளில் வாழும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த நாடுகள் உரிய முறையில் வழங்காமையினால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக