புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன்முதலிடம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இணையத்தளத்தில் வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்று முடிவுகளின் படி யாழ் மாவட்டத்தில் இம்மாணவன் 193 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
அத்துடன் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளையும், ஸ்ரீகந்தராசா ஆரணி 190 புள்ளிகளையும் பெற்றுள்ளனர் என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இம்முறை யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு 309 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில் 143 பேர் சித்தியடைந்துள்ளனர் என பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக