முதலில் கூட்டணியாக இணைந்தும் - இரண்டாவதாக வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி, மூன்றாவதாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 66 வது வருட நிறைவை முன்னணிட்டு, கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி கட்சி என்பது, தனி நபருக்கோ, குழுவினருக்கோ, குடும்பத்திற்கோ சொந்தமானதல்ல. இது முழு நாட்டுக்கும் சொந்தமான கட்சி. நாட்டை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க இந்த அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என எண்ணினார்.
இன,மத பேதமின்றி நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக்கட்சியின் நோக்கம். அத்துடன் கட்சியை பாதுகாப்பதற்காக 6 ஆயிரம் பேர் உயிர்களை தியாகம் செய்துள்ளனர் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக