பிள்ளையானின் முதலமைச்சர் காலத்தில் கிழக்கு மாகாண சபையில் நீதியான நிர்வாகம் நடைபெறவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்திலேயே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
அங்கே அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
நமக்கு இன்று தேவைப்படுவது நீதியான நிர்வாகமாகும். கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சியின் போது பிள்ளையானால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. ஆனால் இன்று மக்களை பயறுத்தி வாக்குகளை பெற பார்க்கின்றார்கள். தமிழ் - முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை. நாங்கள் இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலை கேட்கவில்லை, நாங்கள் எல்லோரும் கேட்டது வடக்கில் தேர்தலை வையுங்கள் என்றே.
யுத்தத்திற்கு பின்னர் வடமாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாக இருந்தால் வடமாகாண சபை தேர்தல் ஒன்று தேவையாகும். வடமாகாண தேர்தல் நடைபெற்றால் சிவில் நடவடிக்கையையும் ஜனநாயகத்தையும் அங்கு ஏற்படுத்த முடியும் எனக்கேட்டோம்.
இன்று நாட்டின் பிரச்சினைக்கு தேசிய மட்டத்திலான தீர்வு தேவையென கூறுகின்றோம். இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சேர்ந்து இதற்காக தீர்வை காணமுடியும்.
இன்று இந்த பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்றியது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம்தான். 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் ஒரு பிரேரணை முன் வைக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டதையடுத்து அது இன்று சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. அந்த பிரச்சினையை தீர்க்க வேண்டியுள்ளது.
வடக்கே தேர்தலை நடத்தி கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அதை செய்யாமல் கிழக்கு மாகாண சபை தேர்தலொன்று தேவையா எனக்கேட்கின்றனர்.
இன்று வாழ்க்கை சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை அரசாங்கம் கூட்டியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் துஷ்பிரயோகம் நடை பெற்றுவருகின்றன. இது அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக இஸட் புள்ளி விவகாரத்தில் மோசடி செய்தனர். இலவச கல்வியை இல்லாதொழித்துள்ளார்கள். சமுர்த்தியை இல்லாமல் செய்யப்போகின்றார்கள்.
எல்லா இடங்களிலும் மோசடியும் ஊழலும் தலைவிரித்து ஆடுகின்றது. தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இந்த கிழக்கு மாகாண சபையில் என்ன செய்தார்கள்? இந்த மாகாண சபைகள் மூலமாக இந்த வீதிகள் எதுவும் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
நான் டோக்கியோவில் பேசியே நிதியைப் பெற்றுக் கொடுத்தேன். ஆனால் அதில் இவர்கள் கொமிஷன் பெற்றுக் கொண்டார்கள். இந்த கொமிஷன் மூலம் இங்குள்ள பல காணிகளை வாங்கியுள்ளார்கள்.
மட்டக்களப்பிலுள்ள பல காணிகளை இவர்கள் வாங்கியுள்ளார்கள். மட்டக்களப்புக்கு தரம் குறைந்த பெற்றோலே அனுப்பப்படுகின்றது. மட்டக்களப்புக்கு புகையிரத வண்டி மூலம் அனுப்பப்படும் பெற்றோல் புகையிரதத்தில் தரம் குறைந்த பெற்றோல் என எழுதப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள மக்கள் ஏழை மக்கள். இவர்களை ஏமாற்றலாமென அரசாங்கம் கருதுகின்றது.
மக்களை அச்சுறுத்தி பயமுறுத்தி மக்களின் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பயமில்லாமல் சென்று உங்களுடைய யானைச்சின்னத்திற்கு வாக்குகளை அளியுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அரச ரட்ணம் சசிதரன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள் என பலர் உரையாற்றினர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக