13வது திருத்தச்சட்டம் தொடர்பில் நாடு முழுவதிலும் வாக்கெடுப்பு நடத்தக்கூடாது: முஸ்லிம் காங்கிரஸ்அரசாங்கம் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் வெகுசன வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் வெகுசன வாக்கெடுப்பு நடத்தினால் அதனை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கும். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். நாடு முழுவதிலும் வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதனை எதிர்க்கக் கூடும். எனவே நாடு முழுவதிலும் வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது என ஹசன் அலி தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக