வெள்ளி, 26 அக்டோபர், 2012

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் அரசின் முயற்சி தற்கொலைக்கு சமமானது

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் அரசாங்கத்தின் முயற்சியானது தற்கொலைக்கு நிகரானது.
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அது நாட்டுக்கு பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.தற்போதைய ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றோர் கோஷங்கள் எழுப்ப எதுவும் இல்லாத காரணத்தினால் 13ம் திருத்தச் சட்டத்தை தூக்கிப் பிடித்துள்ளனர்.
இந்தப் போராட்டங்களினால் மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆளும் கட்சி முயற்சிக்கின்றது. நாட்டின் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்தச் சட்டமே காரணம் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.எனினும், மக்களின் அநேக பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் இயலாமையே கரணமாகும். வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்ட முடியாத காரணத்தினால் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாட்டின் அரசியல் சாசனத்துடன் விளையாடுவது எதிர்காலத்தை பாதிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக