வெள்ளி, 26 அக்டோபர், 2012

த.தே.கூ, தமிழருக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளது – சீனத் தூதுவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழருக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக அவர்களோடு நடத்திய சந்திப்புக்களில் தாம் கண்டு கொண்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கு ஜாங்கோ தெரிவித்தார்.
இன்று யாழ்.நூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விதம் கூறினார்.
தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் கொழும்பில் என்னைச் சந்தித்துப் பேச்சு வார்ததை நடத்தினர்.
தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் அவர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
சம்பன்தன் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வடபகுதிக் கட்டமைப்புக்களில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
உண்மையில் யாழில் வீதி அபிவிருத்தி துரிதகதியில் நடபெறுகின்றது. அதை நான் நேரில் பார்ப்பதற்காக வந்துள்ளேன்.
யாழின் அபிவிருத்தியில் சீன அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
வீதி அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றும் சீன அரசாங்கம் வடபகுதியில் வீதிப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொண்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் யுத்தத்திற்கு பின்னர் பாரிய துரித வளர்ச்சியடைவதாக என்னால் பார்க்க முடிகின்றது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக