திங்கள், 1 அக்டோபர், 2012

தள்ளாடும் சிறிலங்கா விமான சேவைகள்

தமிழ்நாட்டுக்கு போதிய பயணிகள் இல்லை – சேவை நடத்த தள்ளாடும் சிறிலங்கா விமான சேவைகள்
தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போதிய பயணிகள் இல்லாமல் விமான சேவைகள் அடிக்கடி இடைநிறுத்தப்பட்டு வருகின்றன.
போதிய பயணிகள் இன்மையால், கொழும்பில் இருந்து, திருச்சிக்கு சேவையை நடத்தி வரும் மிகின் லங்கா நிறுவனம் கடந்த இரண்டு நாட்களாக சேவையை இடைநிறுத்தியுள்ளது.
நேற்று முன்தினமும், நேற்றும் திருச்சிக்கான விமான சேவைகளை மிகின் லங்கா நிறுவனம் நிறுத்திய போதிலும், முன்பதிவு செய்த பயணிகள் சிறிலங்கன் விமானசேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக