தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
தீவகத்தில் வறியப்பட்ட மாணவர்களின் படிப்பிலும், வயிற்றிலும் அடிக்கின்ற அதிபர்
தீவகத்தில் வறியப்பட்ட மாணவர்களின் படிப்பிலும், வயிற்றிலும் அடிக்கின்ற அதிபர்
அதிபரின் பெயர் வனிதராணி தேவதாசன். வயது 49. பயிற்றப்பட்ட ஆசிரியர் என்கிற தகைமை பெற்றவர் இந்து சமய பாடத்தில். ஆசிரியப் பணியில் நீண்ட அனுபவம் உடையவர்.
எமக்குக் கிடைக்கப் பெற்று இருக்கின்ற புலனாய்வுத் தகவல்கள் இவரது ஒழுக்கம், இயலாமை, மோசடி ஆகியன பற்றியவை.
இவர் பாடசாலைக்கு பெரும்பாலும் பாவாடை, சட்டை அணிந்துதான் வருவார் என்று நம்பகமாக தெரிய வந்து உள்ளது. நேரத்துக்கு இவர் பாடசாலை வருகின்றமை மிக அரிது. இவரது அனுமதியுடன் கணவன் உட்பட உறவினர்கள் பலரும் பாடசாலையின் பொறுப்பு வாய்ந்த விடயங்களில் தலையிட்டு வருகின்றார்கள். பாடசாலையின் கொத்துச் சாவி பல சந்தர்ப்பங்களில் இவரது கணவனால் பகிரங்கமாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இவரது கணவன் இவரிடம் பயின்ற மாணவர். இவரைக் காட்டிலும் சுமார் 15 வயது இளையவர்.
அதிபர் வனிதராணிக்கு இடையிட்டு வந்து உள்ளது கண் பார்வைக் குறைபாடு. கிட்டத்தட்ட 75 சதவீதம் இவருக்கு பார்வை இல்லை. எவரேனும் ஒருவர் அணிந்து இருக்கக் கூடிய உடையின் நிறத்தை இவரது கண்களால் அடையாளம் காண முடியாது. இதனால் நிர்வாக வேலைகளையும் சரி, கற்பித்தல் வேலைகளையும் சரி சுயம் மேற்கொள்ள முடியாதவராக உள்ளார்.
இதனால் இரு ஆசிரியர்களை கையகப்படுத்தி வைத்திருக்கின்றார். இவர்களைக் கொண்டே இவ்வேலைகளை செய்விக்கின்றார். ஆகவே முறைகேடான வகையில் சலுகைகளை வழங்கி இவர்களை குளிர்மைப்படுத்தி வருகின்றார். இந்த ஆசிரியர்களின் பிள்ளைகளும் இப்பாடசாலையில்தான் படிக்கின்றனர். இவர்களுக்கு எப்போதும் ஏனைய மாணவர்களை காட்டிலும் அதிகப்படியான புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் என்பது அதிபரின் கண்டிப்பான உத்தரவு.
பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற உணவில் இருந்து பாடசாலை அபிவிருத்திக்கு என்று கிடைக்கப் பெறுகின்ற நிதி வரை சகல விடயங்களிலும் இவரது மோசடிகள், முறைகேடுகள் உள்ளன.
சுமார் 28 மாணவர்கள் இங்கு பயில்கின்றார்கள் என்று கல்வித் திணைக்கள அலுவலகத்துக்குபபொய்க் கணக்குக் காட்டி கூடுதல் உணவு பெறுகின்றார். யுத்தம் முடிவுற்ற பிற்பாடு நெடுந்தீவில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு வன்னி முதலாய இடங்களில் இருந்து சில குடும்பங்கள் வந்திருந்தன. இக்குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இப்பாடசாலையில் சில காலம் பயின்று விட்டு சென்று விட்டார்கள். இவர்கள் குறித்த பழைய பதிவுகள் அதிபரின் மோசடிக்கு உதவியாக உள்ளன. இவருக்கு உதவியாக கல்வித் திணைக்களத்தில் சில அதிகாரிகளும் உள்ளார்கள்.
இப்பாடசாலையில் பயில்கின்ற மாணவர்கள் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அரை வயிறு, கால் வயிறு என்று பாடசாலை வருபவர்கள். இவர்களுக்கான உணவைக்கூட இவர் முறையாக வழங்க மாட்டார். ஒரு தடவைக்கு மேல் உணவு கொடுக்க மாட்டார். ஆனால் பொய்க் கணக்கு மூலம் கிடைக்கப் பெறுகின்ற உணவு அடங்கலாக உணவின் அதிக பகுதி இவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இவரது வீட்டில் மதியச் சமையல் இடம்பெறுகின்றமையே கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் இவருக்கு நெருக்கமான உறவுக்காரர்கள் பாடசாலைக்கு வந்து, உண்டு, வயிறு நிரப்பிச் செல்வார்கள். தற்போது மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் பாடசாலையின் கட்டிட வேலைகளுக்கென பெருந்தொகை நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. இவர் இந்நிதியை பல வழிகளிலும் துஷ்பிரயோகங்கள் செய்கின்றமையுடன் முறைகேடாகவும் பயன்படுத்துகின்றார் என்று தெரிகின்றது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டைகளில் ஒன்று நெடுந்தீவு. இக்கட்சியைச் சேர்ந்த பிரதேச தலைவர்களுடன் இவருக்கு பழக்கம் உள்ளது என ஊர் மக்கள் நம்புகின்றார்கள். அத்துடன் இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் நெடுந்தீவைச் சேர்ந்தவர்தான். இந்நாடாளுமன்ற உறுப்பினர் இயல்பாகவே இளகிய குணம் உடையவர். இவருடனும் அதிபருக்கு பழக்கம் உள்ளது என சொல்லப்படுகின்றது. எனவே அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் தயங்குகின்றமையுடன் உரியவர்களின் கவனத்துக்கு அதிபர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கொண்டு சொல்கின்றமைக்கான மார்க்கம் என்னவென்று அறியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை போன்ற நாடுகளில் இன்று எல்லா விடயங்களிலுமே ஓரளவு அரசியல் தலையீடு காணப்பட்டு வருகின்றது. ஆனால் இத்தலையீடு பொதுமக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அதிபராக செயல்பட்ட ஆறு. திருமுருகன் அப்பதவிக்கு அருகதை அற்றவராக நடந்து வந்திருக்கின்றார் என்கிற காரணத்தால் சில மாதங்களுக்கு முன்னர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். இவர் இதைத் தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் சேவையில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது என குற்றம் சாட்டி இருந்தார்.
இவரது இக்குற்றச்சாட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீதும், கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மீதும்தான் வந்து விழுந்தது. யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் சேவையைச் சேர்ந்தவர்கள்கூட அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கின்ற அமைச்சர் ஒருவரை பகிரங்கமாக விமர்சிக்கின்ற அளவுக்கு ஜனநாயகம் நிலவுகின்றது என்பது வேறு விடயம். அமைச்சர்தான் உண்மையில் தலையிட்டு ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு விமோசனத்தையும், விடிவையும் பெற்றுக் கொடுத்து உள்ளார் என்று கல்விச் சமூகத்தினர் இரகசியமாக பாராட்டி வருகின்றனர். அமைச்சர்தான் உண்மையில் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருப்பாரானால் நாமும் அவரைப் பாராட்டுகின்றோம்.
நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயத்துக்கு மாணவர்களுக்கு எப்போது விடிவும், விமோசனமும் கிடைக்கப் போகின்றது என்பது தெரியவில்லை. பொறுப்பில் உள்ளவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக