திங்கள், 22 அக்டோபர், 2012

பிரபாகரனுக்கு அடுத்த தலைவர் என கூறப்பட்டவரே இந்த கே.பி. - குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்பது பாரதூரமானது: - ஜயலத் ஜயவர்தன

சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான முன்னாள் புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவரான குமரன் பத்மநாதன் தொடர்பான வழக்குகளோ அவருக்கு ௭திரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் போதிய ஆதாரங்களோ இல்லையென தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்திருப்பதானது மிகவும் பாரதூரமானவொன்றென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். குமரன் பத்மநாதனுக்கு ௭திராக இந்தியாவில் சென்னை மாநில நீதிமன்றமொன்றில் வழக்குள்ளதுடன் நீதிமன்றத்தினால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரை சர்வதேச பொலிஸாரும் தேடி வருகின்றனர். இந்நிலையில் தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளமை உண்மையை மூடி மறைக்கும் விடயமாகும்.
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த தலைவர் என பகிரங்கமாக கூறப்பட்ட ஒருவரே இந்த கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன். இவர் போர்குற்றவாளி, பயங்கரவாதி எனவே ஏன் அவரை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக