
தோணிக்கல், பொதுக் கிணறு வீதி பகுதியில் வசித்த 67 வயது பெண் ஒருவர் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறிப்பிட்ட இப்பெண் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக பின்னர் அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
வெட்டுகாயங்களுக்கு உள்ளான இரவு, இப்பெண் அவரது உறவினர் ஒருவர் வீட்டில் இருந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக