செவ்வாய், 30 அக்டோபர், 2012

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த பிரித்தானியா சென்றுள்ள, இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே முரண்பாடு


News Serviceஇறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பில் பிரித்தானியா சென்றுள்ள குழுவினரிடையே இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பது தொடர்பில் பிரித்தானியாவில் வாழும் இலங்கையின் இளம் தலைமுறையினருடன் பேச்சுவார்த்தை இலங்கையின் அரசியல் பிரதிநிதிகள் அங்கு சென்றுள்ளனர்.
இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்குவர்.இந்த நிலையில், போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த தமது கட்சி ஆதரவு வழங்காது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த குழுவினர் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர், வெளியிட்ட கூட்டறிக்கையில் பிரதான அங்கமாக போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேணடியது அத்தியவசியமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை சுட்டிக்காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி ரகு பாலச்சந்திரன், அவ்வாறான விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சினையில், ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமது கட்சிக்கும் இடையிலான நிலைப்பாடுகளில் மாற்றங்கள் இருந்தாலும் பிரித்தானியா வந்துள்ள பிரிதிநிதிகள் இடையில் கருத்து முரண்பாடுகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த திஸாநாயக்கவையும் உள்ளடக்கிய இந்த குழுவினர் பிரித்தானியாவில் உள்ள பல இலங்கை குழுக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இலங்கை தமிழ் மக்களின் பிரதான அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை ரகு பாலச்சந்திரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இண்டர்நேஷனல் எலர்ட் மற்றும் அரச பொது நலவாய அமைப்புச் சங்கம் ஆகிய ஏற்பாடு செய்துள்ள இந்த பயணமானது, புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை அரசாங்கதிற்கு உதவும் நோக்கத்தை கொண்டது என வெளியிடப்படும் கருத்துக்களை அவர் நிராகரித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக