செவ்வாய், 30 அக்டோபர், 2012

13வது திருத்தத்தை ஒழிக்கும் சர்ச்சை – கோத்தாவிடம் துருவினார் ரஞ்சன் மத்தாய்

13வது திருத்தத்தை ஒழிக்கும் சர்ச்சை – கோத்தாவிடம் துருவினார் ரஞ்சன் மத்தாய்
உள்நாட்டு அல்லது பிராந்திய விவகாரங்களினால், இந்திய – சிறிலங்கா உறவுகள் பாதிக்கப்படாது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.கடந்தவாரம், புதுடெல்லியில் உயர்மட்ட இந்திய அதிகாரிகளுடன், பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
கொழும்பு திரும்பிய அவரிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையில் இருந்து வரும் பிரச்சினையினால், இந்திய – சிறிலங்கா இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனியையும் கோத்தாபய ராஜபக்ச சந்தித்திருந்தார்.அவர்களுடனான பேச்சுக்களில் மீனவர்களின் விவகாரமே முக்கியமாக இடம்பெற்றிருந்தது.13வது திருத்தத்தை ஒழிக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்தும் இந்தியத்தரப்புடன் பேசப்பட்டதா என்று கோத்தாபய ராஜபக்சவிடம் கேட்ட போது, இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயுடனான சந்திப்பின் போது, இதுபற்றி அவர் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டார்.இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு சக்திகள் சிறிலங்காவை தமது தளமாகப் பயன்படுத்தக் கூடும் என்று இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.அதற்கு, இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய வெளிநாட்டு சக்திகளுக்கு சிறிலங்கா இடமளிக்காது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உறுதி அளித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக