ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் சிங்கள தேசியவாத கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் விரிவான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
முதல் கட்டமாக 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து இந்தக் கூட்டணி கவனம் செலுத்த உள்ளது. அடுத்த கட்டமாக நாட்டில் நிலவி வரும் அரசியல் பிரச்சினைகள் குறித்து நேரடித் தலையீடுகளை செய்ய இந்தக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு பிரச்சினைகளின் போது மௌனம் காத்து வருவதாகவும், இந்த இடைவெளியை நிரப்பும் நோக்கில் புதிய கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாகவும் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டணியில் ஜே.வி.பி.யையும் இணைத்துக் கொள்ள உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடாத பௌத்த பிக்குகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களையும் இந்தக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக