இறுதிக்கட்ட போரின் போது முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் போதியளவு தம்மிடம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இதுவரை காலமும் ஐக்கிய நாடுகள் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக வெளிப்படையாக கூறவில்லை.
எனினும் பிற அமைப்புக்களினதும் பொதுமக்களின் வாய்மொழி சாட்சியங்களையும் வைத்தே அறிக்கைகளை விடுத்ததுடன், தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கையினையும் ஆதாரம் காட்டியது.
ஆனால் தற்போது முதல் முறையாக தம்மிடம் காணொளிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஆதாரங்களை அடிப்படையாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை மீது அழுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஐ. நா. வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஆதாரங்கள் உள்ளன: ஐ.நா அறிவிப்புகடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 40,000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு காணொளி ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அதன் சட்டத்தை மீறிய கொலைகள், யுத்த கால வன்முறைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலான நிபுனர் கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் நேற்று இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் மாத்திரம் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலான காணொளிகள் தம்மிடம் உள்ளன. அவை உண்மையானவை என்று நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காணொளிகள் இதுவரையில் சனல் 4 உள்ளிட்ட எந்த ஊடகத்திலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்துக்கோ காண்பிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளிகளை எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க உத்தேசித்திருந்த போதும், இந்த மாநாட்டில் இலங்கை தொடர்பில் கருத்து தெரிவிக்க உறுப்பு நாடுகளுக்கு 70 நொடிகளே வழங்கப்படவுள்ள நிலையில், அதனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் தாம் அடுத்த ஆண்டுக்கான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாடு தொடர்பிலேயே அவதானம் செலுத்துவதாகவும், இது இலங்கைக்கு பெரும் சவாலானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகளின் பணிகள் தொடர்பில், அதன் சிரேஷ்ட உறுப்பினர் பெற்றி தயாரித்த அறிக்கையும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக