புதன், 24 அக்டோபர், 2012

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பதை இந்திய அரசு தற்போது உணர்ந்துள்ளது! மாவை சேனாதிராசா

இலங்கைக்குள் பிற நாடுகளின் உள்நுழைவுகளினால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சூழல் அதிகரித்துக் கொண்டிருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உணர்ந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.அத்துடன், அதற்கெதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுப்பதாக தாம் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்.நகரை அண்டிய பகுதியில் இந்தியாவிற்கு எதிராகவுள்ள ஒரு நாட்டின் அதவதான நிலையமொன்று அமைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்தும், இலங்கைக்குள் இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் உள்நுழைவு குறித்தும் இந்திய விஜயத்தின்போது பேசப் பட்டனவா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இங்கு அவதான நிலையங்கள் அமைவது தொடர்பில் எமக்குச் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் அது குறித்து பேசுவோம்.
இதேபோல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதை இந்திய அரசு உணர ஆரம்பித்திருக்கின்றது. அது இரண்டு நாடுகளுடனும் தொடர்புபட்டதொரு விடயம். இதேபோல் அண்மையில் நாம் சீனா நாட்டின் தூதுவரை சந்தித்துப் பேசியிருந்தோம். இதன்போது அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராடிய சீனாவின் மாவோசேதுங் கை நாங்கள் மதிக்கின்றோம். அதேவேளை அடக்கு முறைக்கும், ஓடுக்கு முறைக்கும் உட்பட்டுக் கிடக்கும் எமது மக்களுக்கு சார்பான நிலைப்பாடுகளை சீனா கொண்டிருக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம் என்ற விடயத்தை வெளிப்படுத்தினோம்.
இதேபோன்று எமது மக்கள் தங்களுடைய வாழ்விடங்களில் சென்று வாழ முடியாதளவிற்கு அந்த இடங்களில் படையினர் தங்கியிருக்கின்றனர். அவ்வாறு படையினர் தங்கியிருப்பதற்கு சீனா அரசாங்கம் வழங்கும் உதவிகளே காரணமாகவுள்ளது.
னவே எங்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கும், எங்களுடைய மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக்கப்படுவதற்கும் சீனா அரசாங்கம் உதவக் கூடாது என்ற நிலைப்பாட்டை முன்வைத்தோம். இதற்குப் பதிலளித்த சீனா நாட்டின் தூதுவர் தான் கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே பதவியை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்ததுடன், அரசாங்கத் தரப்பு நிலைப்பாட்டை தாம் ஏற்கனவே அறிந்திருக்கின்றோம். தற்போது உங்களுடனும் பேசியிருக்கின்றோம்.
எனவே தொடர்ந்தும் தொடர்பிலிருங்கள் என கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார். என்றார் மாவை சேனாதிராசா எம்.பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக