வியாழன், 25 அக்டோபர், 2012



இந்த இசை நிகழ்ச்சிக்கு எந்த அரசியல் சார்பும் கிடையாது. டிரினிடி ஈவண்ட்ஸ் லாபம் நோக்கோடு நடத்தப்படும் நிறுவனம். கனடாவிலும் மற்றும் தென்னிந்தியாவிலும் பொழுதுபோக்குக்கான் திரை மற்றும் இசை சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை வளர்ப்பதே இதன் நோக்கம் எனத் தெரிவித்த கிசான் நித்தி அவர்கள்.
இந்த இசை நிகழ்ச்சியின் நுழைவுச் சீட்டு விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி நிதி வட இலங்கையில் உள்ளூரின் சேவைகளுக்கும் மிக முக்கியமான மருத்துவ திட்டத்திற்கும் நன்கொடையாக அளிக்கப்பட உள்ளது. நாம் இருவருமே கலைஞர்கள். சிறுவயதில் கலையில் ஈடுபட்டவர்கள். அதுவே எம்மை இந்த நிகழ்ச்சியை நடத்த உந்தியது. தமிழ் இசையைக் கொண்டாடும் அதே வேளையில் நம் மக்களை மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு உதவும் வண்ணம் அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தும் நிறுவனங்களை ஆதரிப்பது அவசியம்' என்கிறார் டிரினிட்டி ஈவண்ட்ஸ்அநிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ஈழத்தமிழர் திரு. டன்ஸ்டன் பீட்டர்.
நுளைவாயில் சீட்டின் லாபத்தில் இருந்து வரும் ஒரு பங்கை வைத்தியர்களால் நடாத்தப்படும் கனடிய மருத்துவ மற்றும் பல் மருத்துவ சங்கத்திடம் (CMDDA) வழங்கப்படவுள்ளது. இந்த நிதியை இருப்பிடத்தை விட்டு தவித்துக் கொண்டிருக்கும் முல்லைத் தீவு மாவட்டத்தை சேர்ந்த கேப்பாபிளவு மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்துமாறு மருத்துவ சங்கத்திடம் கூறியுள்ளோம்' என்கிறார் திரு.டன்ஸ்டன
Rogers Centre மைய அரங்கில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைத்த நாளை வைத்தே இந்த இசை நிகழ்ச்சியின் தேதி குறிக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வ மாவீரர் நினைவு வாரத்தில் நடைபெறவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இது குறித்து கனடாவிலுள்ள தமிழ் சமூக அமைப்புக்களுடன் ஆலோசித்து நவம்பர் மூன்றாம் தேதி மாவீரர் நினைவு நிகழ்வுகள் பொதுவாக வைக்கப்படுவது இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இந்தத் தேதி குறிக்கப்பட்டது'. 'நாங்களும் உங்களில் ஒருவர்கள். எம் மண்ணில் வித்தாக வீழ்ந்த மாவீர்ர்கள் குறித்து எங்களுக்கும் பற்றும் பாசமும் ஆழ்ந்த உணர்வும் உண்டு. அந்த வகையில் சில உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் எமக்கு மிகுந்த மனவருத்த்தை தருகிறது"தெரிவிக்கிறார் திரு.கிசான் நித்தி
கிழக்கில் ஹாலிஃபாக்ஸிலிருந்து மேற்கே சான் ஃப்ரான்சிஸ்கோ வரை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நுழைவுச் சீட்டுக்களின் விற்பனை வேகத்திலிருந்து அவர்கள் எத்தனை ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது' என மேலும் கூறுகிறார் திரு கிசான் நித்தி.
தென்னிந்தியாவின் இசை மேதையான இசைஞானி இளையராஜாவுடன் பாடகர்கள் நடிகர் என தமிழ்த் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட 100 கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை சென்னையில் பிரமாண்டமாக நடந்துக் கொண்டிருப்பதாகவும் அது மட்டுமில்லாமல் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ள அத்தனை கலைஞர்களுக்கும் பயண கடவு சீட்டு உள்ளிட்ட அனைத்தும் பெறப்பட்டு விட்டதுடன் இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்துவதற்காக ஆரம்பக் கட்ட வேலைகள் அத்தனையும் முடிந்து விட்டன' என்கிறார் டிரினிட்டி ஈவெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் திரு.கிசான் நித்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக