ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலாளர் நாயகம் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்ட பிராந்திய பணிப்பாளருமாகிய அஜய் சிப்பர் உள்ளிட்ட குழுவினர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்க, யாழ் மாவட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ் அரசாங்க அதிபர் உடனான சந்திப்போது மீள்குடியேற்றம், மேற்கொள்ளப்பட்டுவரும் உட்கட்டுமான அமைப்பு வேலைகளில் உள்ளுர் மக்களின் பங்களிப்பு, மாவட்டத்தில் எதிர்நோக்கப்படுகின்ற சவால்கள், உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
உட்கட்டுமான வேலைகள், உள்ளுர் மக்களினுடைய பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், விசேட தொழில்நுட்ப வேலைகள் வெளியாட்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
யு.என்.டி.பியினால் நடாத்தப்படுகின்ற பொதுமக்கள் சேவைக்கான சர்வதேச நிலையம் ஒன்று உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளை வழங்கிவருகின்றது.
இப்பயிற்சிகளில் தமது அலுவல்களையும் இணைத்து பயிற்சிவழங்க உதவுமாறு யு.என்.டி.பி பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு யு.என்.டி.பி செயலாளர் நாயகம் உடனடியாக சம்மதம் தெரிவித்தாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக