மட்டு – அம்பாறை மாவட்டங்களில் பஸ்களில் பயணிக்கும் மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் சேஷ்டைகளில் ஈடுபடும் கும்பல்களினால் போக்குவரத்துச் செய்வதில் இளம் பெண்கள் பெரும் அசௌகரியங்களை ௭திர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.சமீபகாலமாக மட்டு. – அம்பாறை மாவட்டங்களின் பிரதான வீதிகளில் பயணிக்கும் பஸ்கள், தனியார் வேன்களில் தேவை நிமிர்த்தம் பயணம் செய்யும் பெண்களிடம் தவறான முறையில் சேஷ்டைகளில் இளைஞர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகனங்களில் பயணிப்பதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர்.
குறிப்பாக பாடசாலைக்கு மாணவிகள் சென்று வரும் போது பயணிக்கும் வாகனங்களில் ஏறிக்கொள்ளும் சிலர் மாணவிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர். இவை தவிர வாகனங்களில் நிலவும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள் திருட்டுச் சம்பவத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகவே, பாடசாலை நேரங்களில் சேவையில் ஈடுபடும் வாகனங்களில் தேவையில்லாது பயணித்து பெண்களுக்கு அசௌகரியம் விளைவிக்கும் நபர்களுக்கு ௭திராக நடவடிக்கை ௭டுக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக