ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஜோர்ச் சாளினி (வயது 10) என்னும் மாணவியே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவர்.
குளிக்கச் சென்ற மேற்படிச் சிறுமி தவறுதலாக கிணற்றுக்குள் வீழந்துள்ளார். குறித்த சிறுமி குளிக்கச் சென்ற கிணறு வீட்டிற்கு பின்புறமாக சற்றுத் தொலைவில் இருந்ததால் சிறுமி கிணற்றுக்குள் விழுந்து தத்தளிப்பதை யாருமே காணவில்லை. இதனால் சிறுமி தண்ணீருக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததைத் தொடர்ந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் வீட்டில் இருந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும் எங்கு தேடியும், சிறுமியின் நண்பிகளிடமும் விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
குறித்த சிறுமியின் தாயார் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது சிறுமி தலையில் அணிந்திருந்த பூழ்பான்ட் தண்ணீரில் மிதப்பதை கண்டுள்ளார்.
இதனை அடுத்து ஊர்மக்களின் உதவியுடன் கிணற்றுக்குள் தேடுதல் நடத்தப்பட்டு சிறுமியின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக