13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பம் முதலே நிராகரிக்கின்றது. இலங்கையில் 13ம் திருத்தச் சட்டமானது அர்த்தமற்ற வகையில் அமைந்துள்ளது.
எனவே 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை நாம் தொடர்ச்சியாக எதிர்க்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
13ம் திருத்தச் சட்டம் பற்றிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 9ம் திகதி நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போது சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இது தொடர்பில் கடந்த 17ம் திகதி நிலைப்பாட்டை வெளியிடுமாறு கோரிய போதிலும் சுமந்திரன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளதாக தினமின பத்தரிகை செய்தி வெளியிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக