
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
2008ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக இலங்கை வாக்குறுதி அளித்திருந்ததாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
2008ம் ஆண்டு அகில கால மீளாய்வு அமர்வுகளில் வாக்குறுதி அளித்ததனபை; போன்று இலங்கை 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கூடிய விரைவில் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுதல், மும்மொழிக் கொள்கைகளை அமுல்படுத்தல், இராணுவத்தினர் பயன்படுத்தி வரும் தனியார் காணிகளை மீள ஒப்படைத்தல் போன்றவற்றின் ஊடாக மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக