ஞாயிறு, 4 நவம்பர், 2012

வடக்கு, கிழக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விலக்க வேண்டும் – அமெரிக்கத் தூதுவர்

Michele_Sisonவடக்கு, கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் செயற்பாடுகளில் உள்ள இராணுவத் தலையீட்டை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கல் ஜே சிசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் செயற்பாடுகளில் சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு இன்னமும் உள்ளது. இதனை விலக்கிக் கொள்ள வேண்டும்.
சிறிலங்காவில் இன்னமும் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவில்லை.
இந்த இனப்பிரச்சினையைத் தீர்க்கப்பதற்கு உதவ அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தயாராகவே உள்ளன.சிறிலங்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
வடக்கில் அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் அண்மையில் வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், அமெரிக்கத் தூதுவரும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக