சனி, 24 நவம்பர், 2012

சீனாவிடமிருந்து 4200 கோடி கடன் பெற்று செய்மதி தயாரிக்கிறது அரசு :ஜதேக குற்றச்சாட்டு

News Serviceஉலகின் 45ஆவநாடாக செய்மதியை அனுப்புவதற்காக அரசாங்கம் 4200 கோடி ரூபாவை செலவழித்துள்ளது. இந்த நிதியானது சீனாவிடம் இருந்து முற்று முழுதாக வணிக கடன் அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. ஆனால் வரவு செலவுத்திட்டத்தில் மகளிர் விவகார அமைச்சுக்கு 10 கோடி ரூபாவே என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைப் பெண்கள் செல்லொனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் குறித்த புனர்வாழ்வுசெயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனினும் அரசாங்கம் செய்மதிக்காக வணிகக் கடனாக பெறப்பட்ட 4200 கோடி ஒதுக்கியுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக