சனி, 24 நவம்பர், 2012

அநாவசியமான கேள்விகளை எழுப்பினால், சபையிலிருந்து வெளியே அனுப்ப வேண்டிவரும்: அஷ்வரை எச்சரித்த சபாநாயகர்

பாராளுமன்றில் அநாவசியமான ஒழுங்கு பிரச்சினைகளை கேள்விகளாக எழுப்பும் நபர்களை சபைக்கு வெளியில் அனுப்ப வேண்டிவருமென News Serviceசபாநாயகர் சமல் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். 2013 வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உரையாற்றிய வேளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை கேள்வியாக எழுப்பினார். அந்த சமயத்தில் கேள்வி ஒழுங்கு பிரச்சினையோடு தொடர்புடையதல்ல என தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்றில் அநாவசியமான ஒழுங்கு பிரச்சினைகளை கேள்விகளாக எழுப்பும் நபர்களை சபைக்கு வெளியில் விரட்ட வேண்டிவருமென எச்சரித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சபாநாயகருக்கு நன்றி தெரிவித்ததோடு சபாநாயகர் ஆசனத்தில் இருந்து சென்றதும் அந்த ஆசனத்தில் அமர்வோர் தங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக