செவ்வாய், 13 நவம்பர், 2012

கேணல் பரிதி அவர்களை கொலைசெய்த குற்றவாளிகளுக்கு 50.000 யூரோக்கள் சிறீலங்கா அரசால் வழங்கப்பட்டது-திடுக்கிடும் தகவல் அம்பலம்


கேணல் பரிதி அவர்களை கொலைசெய்த குற்றவாளிகளுக்கு 50.000 யூரோக்கள் சிறீலங்கா அரசால் வழங்கப்பட்டது-திடுக்கிடும் தகவல் அம்பலம்
செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2012 09:39
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களை சுட்டு படுகொலை செய்த நபர் நேற்று முந்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் கடுமையான விசாரணையை மேற்கொண்டிருந்த பிரான்ஸின் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

கேணல் பருதி அவர்களை கொலைசெய்வதற்காக கொலையாளிகளுக்கு சிறீலங்கா அரசு 50.000 யூரோக்களை வழங்கியுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 33 வயதுடைய சிறீலங்கா பிரஜை வழங்கிய மேலதிக தகவல்களின் அடிப்படையில் இன்னுமொரு சந்தேக நபரை பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக