கேப்பாபிலவு, சீனியா மோட்டையில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் உணவு சமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்தனர். இதுவரை எந்தவித உதவிகளும் வந்துசேரவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த சுமார் 178 குடும்பங்கள் கேப்பாப்பிலவு சீனியாமோட்டைப் பகுதியில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தன. தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையாலும், காற்றாலும் தற்காலிகக் கொட்டகைகளின் தகரங்கள் தூக்கி வீசப்பட்டன. தூவாணமும், மழைநீரும் கொட்டகைகளுக்குள் புகுந்துள்ளது.இதனால் நாளாந்த சமையல் வேலைகளைச் செய்யமுடியாதுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இதுவரை சமைத்த உணவுகளோ வேறு எந்தவித உதவிகளோ மதமக்கு வழங்கப்படவில்லை என்று அவர்கள் மேலும் கூறினர்இந்த மக்களைப் பாதுகாக்க வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் சென்று தங்குமாறு முல்லைத்தீவு அரச அதிபர் அறிவித்தல் விடுத்தபோதும் தமது உடமைகளுக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து அவர்கள் அங்கு செல்ல மறுத்துவிட்டனஅத்துடன் சமைப்பதற்கு மாற்று ஒழுங்கு செய்து தருமாறு அந்தப் பகுதி கிராம சேவையாளரிடம் அவர்கள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து 178 குடும்கங்களுக்கும் குக்கர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக