வெலிக்கடை சிறைச்சாலையின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார் கலவரத்துக்கு காரணமாகிவிருந்த படங்கள் சிறைக்கைதிகள் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த சுமார் 40 பேர் இதுவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிபிடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன .காயமடைந்தவர்களில் விசேட அதிரடிப் படை ஆணையாளரரும் அடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பித்த இந்த கலவரம் இரவு 9.30 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் சிறைப் பகுதியில் துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

கொலைக்குற்றச் சாட்டுக்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கடத்திய குற்றத்தின் காரணமாக சிறையில் இருக்கும் கைதிகளே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என கூறப்படுகின்றது. வெலிக்கடையில் உள்ள ஆயுதக்களஞ்சியத்தை உடைத்தே கைதிகள் துப்பாக்கியினை எடுத்திருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக