திங்கள், 19 நவம்பர், 2012

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அமெரிக்க பிரதிநிதி கொழும்பு விஜயம்

 
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஆராய அமெரிக்காவின் விசேட பிரதி
நிதி ஒருவர் இந்தவாரம் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்வதே அமெரிக்கா விசேட பிரதிநிதியின் நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் குறித்து ஆராயவே இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் முதன்முறையாக இலங்கை வரவுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக