செவ்வாய், 20 நவம்பர், 2012

கறுப்பு மையால் அழிக்கப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கையின் பக்கங்களும் வெளியாகியுள்ளது

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக விசாரணை அறிக்கையின் தணிக்கை செய்யப்பட்ட சில பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.இவ்வாறு தணிக்கை செய்யப்பட்டு அழிக்கப்பட்ட 29 பக்கங்கள் எவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெற்றன என அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது.இந்த 29 பக்கங்களின் உள்ளடக்கங்கள் தொடர்பிலான தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளனவன்னிப் போரில் பாதிக்கப்பட்டோர் பற்றி உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கை முன்கூட்டியே வெளியானமை ஒழுக்க விதிகளுக்கு புறம்பானது என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக