செவ்வாய், 20 நவம்பர், 2012

அனைவரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் - சோபித தேரர

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்ட அனைவரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் - சோபித தேரர்பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்ட அனைவரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்து விபரங்கள் தொடர்பில் பிரதம நீதியரசர், சட்டத்தரணிகளின் ஊடாக தெளிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
எனினும், அநேகமான பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டே களனி நாக விஹாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார
மூன்று நிக்காயக்களினதும் மாநாயக்கத் தேரர்கள், கார்தினால் உள்ளிட்ட கத்தோலிக்க பேரவை பேராயர்கள் உள்ளிட்ட பலரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்த போதிலு;, அரசாங்கம் உரிய பதிலளிக்கவில்லை என சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் பிரதம நிதியரசர் நெவில் சரமக்கோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் இளம் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ அதனை எதிர்த்ததாகக் குறப்பிட்டு;ளாளர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஆளும் கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே விமர்சனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் 11 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், இதில் ஏழு பேர் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்த விசாரணைகளின் இறுதித் தீர்ப்பை புரிந்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக