சனி, 24 நவம்பர், 2012

கிளிநொச்சியில் இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்கள் கண்ணீரோடு வீடு திரும்பினர்: மேலும் பலர் திரும்பலாம்?

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து அண்மையில் இராணுவத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 109 தமிழ் பெண்களில் பலர் இராணுவத்திலிருந்து மீண்டும் தப்பியோடி வீடுகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.
தமிழ் பெண்களிடம் சிங்கள இராணுவத்தின் பாலியல் ரீதியாக நடந்துகொள்ள முற்பட்டதும், இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டத்தப்படாதாலுமே இவர்கள் தப்பியோடி வந்துள்ளனர். இதுவரையில் மூன்று பெண்கள் இவ்வாறு தப்பியோடி வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் மேலும் பல பெண்கள் இவ்வாறு வீடுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை மீண்டும் இராணுவத்துடன் இணைக்கும் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டபோதும் அதுவும் வெற்றியளிக்கவில்லை.இதேவேளை, மேலும் பல பெண்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக