வெள்ளி, 23 நவம்பர், 2012

வடக்கில் படைத்தரப்பிற்கு மாவீரர் தினக்காய்ச்சல் பீடித்துள்ளது

வடக்கில் படைத்தரப்பிற்கு மாவீரர் தினக்காய்ச்சல் பீடித்துள்ளது வழமை போன்று இம்முறையும் படைத்தரப்பிற்கு மாவீரர் தினக்காய்ச்சல் பீடித்துள்ளது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னராக இம்முறை வழமைக்கு மாறாக பொதுமக்களிடையே மாவீரர் தின அனுஸ்டிப்புக்கள் பற்றி பகிரங்கமாக உரையாடல்கள் இடம்பெற்றுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.இதையடுத்தே படைத்தரப்பினை மாவீரர் தினக்காய்ச்சல் கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது.வன்னிப்பகுதி மீதான தமது நெருக்குவாரத்தை கடுமையாக்கியுள்ள படைத்தரப்பு வீதிச்சோதனைகள் மற்றும் இரவு நேர தேடுதல்களையும் முடுக்கிவிட்டுள்ளது.தற்போது பிரதான வீதி தவிர்ந்த கிராமங்களில் மக்கள் அச்சங்காரணமாக நேரகாலத்துடன் வீடுகளுக்குள் முடங்கிவிடும் நிலை காணப்படுகின்றது.குறிப்பாக முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்கள் படைத்தரப்பின் கண்காணிப்பு வளையத்தினுள் வந்துள்ளன.வன்னி படைத்தலைமையகம் மாவீரர் தின எச்சரிக்கைகளை உள்ளுர் அதிகாரிகளது கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளனர்.
இதனிடையே கடந்த ஆண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் கடைசி நேரத்தில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியமை படைத்தரப்பினை எரிச்சலின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது.இம்முறையும் அவர்கள் எதையாவது செய்தவிடுவார்களென படைத்தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதனால் தமது கண்களில் எண்ணையினை விட்டவாறு அலைந்து திரிவதாக பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.குறிப்பாக மாணவ தலைவர்கள் பலரும் தொடர்ந்தும் வேவு பார்க்கப்படுவதாக அத்தரப்புக்கள் மேலும் கூறுகின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக