புதன், 14 நவம்பர், 2012

புலிகளின் சர்வதேச வலையமைப்பில் பாரிய பிளவு: சிங்களப் பத்திரிகை

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் பாரியளவு பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக சகல தமிழ் அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டுமென எல்லாளன் அமைப்பு கோரியுள்ளது.

இவ்வாறு இணைந்து செயற்படத் தவறும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு இணையம் ஊடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலி ஆதரவு அமைப்புக்கள் நான்கு தனித்தனியாக செயற்பட்டு வருவதான ஈழப் போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை என எல்லாளன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவில் ருத்ரகுமாரன் அமைப்பு, கனடாவில் ஆனந்தசங்கரி அமைப்பு, நோர்வேயில் நெடியவன் அமைப்பு மற்றும் லண்டனில் சுரேன் அமைப்பு என பிளவடைந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக