பிரான்ஸ்-தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதியின் கொலையுடன் இலங்கை அரசை தொடர்புபடுத்த முயற்சிப்பதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகம் ஒன்றின் உதவியுடன் இலங்கை மீது குற்றம் சுமத்த விடுதலைப் புலிகள் முயற்சித்து வருகின்றனராம் என அந்நாட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இனந்தெரியாத இலங்கை முகவர்கள் இந்தக் கொலையை மேற்கொண்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. எனினும் பொய்யான தகவல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கத்துடன் அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் தொடர்புகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என வெளிவிவகார அமைச்சு, பிரான்சிற்கான இலங்கைத் தூதரகத்தின் ஊடாக அந்நாட்டுக்கு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக