செவ்வாய், 27 நவம்பர், 2012

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மூன்றாக........

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மூன்றாக பிளவடைந்துள்ளதாக கொழும்பை தளமாகக்கொண்ட சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் கூட்டாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக லண்டனில் மூன்று இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு நிலைமை உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாவீரர் தின நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளை விடவும் தோல்வியடையும்.

ருத்ரகுமாரன் தரப்பு, நெடியவன் தரப்பு மற்றும் விநாயகம் தரப்பு என புலிகள் தனித்தனியாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். ஒன்றிணைந்து நிகழ்வுகளை நடாத்துமாறு அருட்தந்தை இமானுவல் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பிரான்ஸில் வைத்து புலிகளின் தலைவர் பரிதி கொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, புலிகள் வலையமைப்பின் பிளவு அதிகரித்துள்ளதாக குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக