கைது செய்யப்பட்ட மருத்துவ பீட மாணவர்கள் கடுமையான எச்சரிக்கையின் பின் படையினரால் விடுவிக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாக மட்டத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் பல்கலைக்கழக விடுதியில் மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதன் எதிரொலியாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த படையினர் மருத்துவபீட மாணவர்கள் சிலரைக் கைதுசெய்து மறைவான இடமொன்றில் வைத்திருப்பதாக பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் பதட்டம் நிலவுவதாகவும் சற்று முன்னர் குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்பு கொண்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ராணுவத்தின் உச்ச கெடுபிடிகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர் விடுதியில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்pன்றார்கள். கடந்த ஆண்டு யாழ் பல்கலைக்கழக்த்தில் ஆண்கள் விடுதியில் சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதனால் குழப்பமுற்ற படைத்தரப்பு சுற்றவழைத்து அங்கு நிலைகொண்டிருந்தனர்.
குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் ஆனந்தகுமாரசாமி விடுதியில் இந்த சுடர் ஏற்றப்பட்டிருக்கின்றது. பாலசிங்கம் விடுதி என்பது ஆண்கள் விடுதியாகும். இந்த பாலசிங்கம் விடுதி முற்று முழுதாக சுற்றி வளைக்கப்பட்டு இருந்தது. குறித்த குடிநீர் தாங்கி உட்பட படைத்தரப்பினர் இரவுபகலாக நிலை கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பெண்கள் தங்கியிருந்த மற்றொரு விடுதியான ஆனந்தகுமாரசாமி விடுதியில் இன்று திடீரென 6.07க்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டிருந்தது. இதனால் படைத்தரப்பு அதிர்ச்சிக்குள்ளானது. மாணவர் விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டு படையினர் நிலைகொண்டிருந்த நிலையில் சுடர் ஜெக சோதியாக எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட படையினர் மாணவர் விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மாணவிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. அங்கு பிரசன்னமாகியிருந்த சக மாணவர்களும் தாக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்தும் மாணவர் விடுதி சுற்றிவளைக்கட்டு முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியே வரமுடியாத நிலையே காணப்படுகின்றது. இந்த நிலையில் தமக்கு பாதுகாப்பு தருமாறும் தம்மை மீட்nடுக்குமாறும் மாணவர் தரப்பில் பாராhளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அவ்வேளையில் அங்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மீது படைப்புலனாய்வாளர்கள என நம்பப்படுகின்றவர்கள் கல்வீசி அவரது வாகனத்தை தாக்கியிருக்கின்றனர். மேலும் அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள்; மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அழைத்துச் சென்றிருந்த உதயன் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அங்கு படைத்தரப்பினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அவரது கமராவை அவர்கள் பறித்துக் கொண்டு அவர்கள் ஓட முற்பட்டதாகவும் யாழ் காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
படைத்தரப்பு உச்சபட்ச கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதனையும் மீறி மாணவிகள் விடுதியான ஆனந்தகுமாரசாமி விடுதியில் இன்று நடத்தப்பட்ட மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு படைத்தரப்பால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.
பாலசிங்கம் விடுதியிலேயே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறலாம்; என்ற அச்சத்தில் படைத்தரப்பு பெருமளிpல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி மாணவிகள் விடுதியான ஆனந்தகுமாரசாமி விடுமியில் கூடி ஒன்று திரண்ட மாணவ மாணவிகள் மாவீரர்களுக்கான சுடரை ஏற்றியிருந்தனர். இதனாலேயே படைத்தரப்பு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றது.
இந்த நிலையில் படைத்தரப்பு இந்த செய்தி வெளியாகும் வரையிலும் விடுதியை சுற்றி வளைத்து வைத்திருக்கின்றது. எவரும் அங்கிpருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் உதயன் செய்தி ஆசிரியர் ஆகியோர் சரவண பவனின் பாதுகாப்புக்கு எனச் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக யாழ் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சுடறேற்றச் சென்றிருந்த ஏனைய மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் முற்றுகைக்குள்ளேயே இக்கின்றனர். பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பீடாதிபதிகள் சிலர் பாதுகாப்பிற்கென அழைக்கப்டபட்டு அவர்களும் அங்கு நிலைகொள்ள வைக்கப்பட்டிருக்கின்றனர். எவரையும் வெளியில் செல்ல விடாது படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
உள்ளே சென்றவர்கள் உள்ளேயும் வெளியே நிற்பவர்கள் வெளியேயும் நிற்கின்றனர். படையினர் துப்பாக்கி சகிதம் நிலைகொண்டு அவர்களை தடுத்து வைத்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த நிகழ்வு படைத்தரப்பையும் அரசாங்கத்தையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளாகி இருப்பதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக