வெள்ளி, 2 நவம்பர், 2012

கேபி போட்டியிட்டாலும் நான் தான் வட மாகாண முதலமைச்சர்- டக்ளஸ்


வடக்கு மாகாண சபை தேர்தலில் அரசின் சார்பில் முதலமைச்சர் நான் தான் என்று அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா உறுதியாக கூறியுள்ளார்.அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே இதனை அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலைமைச்சர் வேட்பாளராக நானே போட்டியிடவுள்ளேன் எனது விருப்பத்திற்கு மாறாக அரசாங்கம் செயற்படாது தேர்தலில் யார் வேண்டும் என்றாலும் போட்டியிடலாம்.
கே.பி போட்டியிடலாம் கி.பியும் போட்டியிடலாம் ஆனால் மக்களின் தீர்மானமே இறுதியானது ஆகையால் நானே வட மாகாண முதலமைச்சர் என உறுதியாக தெரிவித்தார்.
மீறி அரசு சார்பில் வேறு ஒருவர் போட்டியிட்டால் கிழக்கில் ஹக்கீம் செய்தது போன்று தனித்து போட்டியிடுவேன் என்றார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சனையைப் பெரிதாக்கி வருகின்றன,ர் இவர்களுக்கு பிரச்சனையை தீர்க்கும் எண்ணம் இல்லை என்றும் குறிப்பட்டுள்ளதோடு தமது கட்சிக்கு எதிராக செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக