இந்திய றோலர் மீன்பிடிப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்திய துணைத் தூதரகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய தூதுவரை வெளியே வருமாறு கடற்றொழிலாளர்கள் கூக்குரலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய றோலர்களை கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டமாக வந்த கடற்றொழிலாளர்கள் மகஜர் ஒன்றை தூதுவருக்கு சமர்ப்பிக்க முயன்றனர். இதன்போது 5 பிரதிநிதிகளை மட்டும் தூதரகத்தின் உள்ளே அழைத்து இம்மகஜரைப் பெற்றுக்கொண்டனர்.
இதனால் கடுப்படைந்த கடற்றொழிலாளர்கள் இந்தியத் தூதுவரை வெளியே வருமாறு அழைத்தனர்.
தொடர்ந்து இந்தியா ஒழிக, அடிக்காதே அடிக்காதே இலங்கை மீனவர்கள் வயிற்றில் அடிக்காதே, நிறுத்து நிறுத்து றோலரை நிறுத்து உள்ளிட்ட வாசகங்களையும் இவர்கள் ஏந்தியிருந்ததோடு சத்தமாகவும் கூக்கூரலிட்டனர்.
குறிப்பாக இந்தியா ஒழிக என்று கூக்கூரலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்போது தூதரகத்தின் உள்ளே பெருமளவான இந்திய இராணுவமும் பிரசன்னமாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்த அவர்கள் யாழ்.அரச அதிபரிடம் சென்று மகஜர் ஒன்றைக் கையளிக்கச் சென்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக