புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களது முயற்சியை இன்னமும் கைவிடவில்லை.
விமானப்படையினர் முல்லைத்தீவு வான் பரப்பில் விமானங்களைச் செலுத்துவதில் எவ்வித பிழையும் கிடையாது. சிலர் இதனை பிழையாகக் கருதுகின்றனர்.
முல்லைத்தீவு மட்டுமன்றி நாட்டின் எந்தவொரு வான் பரப்பிலும் பறந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பாதுகாப்புப் படையினரின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக