கடந்த சில தினங்களுக்கு முன்னர், வெலிகடைச் சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கே இராணுவத்தினர் வரவளைக்கப்பட்டனர். இவர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 27 பேர் பரிதாபமாகப் பலியாகினர். கைதிகள் தப்பியோடுவதாகக் கூறியே இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். ஆனால் அவர்களின் கால்களில் சுடாமல், நெஞ்சு, மண்டைப் பகுதி போன்ற இடங்களில் இராணுவத்தினர் சுட்டுள்ளனர். இதன் காரணமாகவே பலர் உயிரிழந்துள்ளனர். இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு அடாவடித்தனம் அரங்கேறியுள்ளது. கொல்லப்பட்ட கைதிகளின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.( இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக