யாழ்.குடாநாட்டிலும் மீண்டும் எம்.ஜி.ஆர்-சிவாஜி பாணியில் நடிகர் விஜய் இற்கும் ரசிகர் மன்றம் முளைத்துள்ளது. தற்போது விஜயின் துப்பாக்கி திரைப்படம் வெளிவந்துள்ள நிலையில் யாழ்.நகரின் குருநகர் பகுதியில் விஜய்க்கு ரசிகர் மன்றம் முளைத்துள்ளது.கை விடப்பட்ட தூபியொன்றை வர்ணம் பூசி அலங்கரித்துள்ள ரசிகபட்டாளங்கள் அப்பகுதிகளில் விஜயினை வாழ்த்தும் வகையிலான பேனர்களையும் தொங்கவிட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று தீபாவளிக்கு யாழ்ப்பாணத்திலும் விஜயின் துப்பாக்கி திரைப்படம் வெளியாகியிருந்தது.சுமார் ஏழு மில்லியனிற்கு அப்படம் வாங்கப்பட்ட போதும் முதல் நாளிலிலேயே கணிசமான வருவாயினை அப்படம் ஈட்டிக்கொடுத்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.முதல் நாள் காட்சிக்கான நுழைவு சீட்டுக்கள் கறுப்பு சந்தையிலேயே விற்க்கப்பட்ட போதும் ரசிகர்களிடையே கைகலப்புத் தலைதூக்கியிருந்தது.
இந்நிலையிலேயே விஜய்க்கு ரசிகர் மன்றமொன்று யாழ்ப்பாணத்தில் முளைத்துள்ளது.நேற்றைய முதல் காட்சிகளின் போது சிதறு தேங்காய் உடைப்பு மற்றும் மேளதாள கொண்டாட்டங்கள் போன்றவையே நடந்து முடிந்திருந்தபோதும் அடுத்து வரும் காலங்களில் கட்அவுட்களுக்கான பாலாபிசேகம் போன்றவையும் நடைபெறலாமென திரையரங்க உரிமையாளர்கள்; தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக