வெள்ளி, 16 நவம்பர், 2012

2ம் இணைப்பு - ஒன்பது மாகாண அலகுகள் அவசியமில்லை – TNAஒன்பது மாகாண அலகுகள் அவசியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூன்று அல்லது நான்கு மாகாண அலகுகளின் ஊடாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி நல்லிணக்கம் தொடர்பில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எதனை நல்லிணக்கமாக கருதுகின்றார் என்பதனை புரிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் மக்களிடம் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக