இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.
சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில தகவல்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்துவது பொருத்தமாகது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாக சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக