வெள்ளி, 30 நவம்பர், 2012

ஐநா மனித உரிமை பேரவை!அங்கத்துவ நாடுகளில் மாற்றம் ஏற்பட்டாலும் இலங்கைக்கு பாதிப்பில்லை

ஐநா மனித உரிமை பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது. இலங்கைக்கு நெருக்கமான பல நாடுகள் மனித உரிமை பேரவையில் இருப்பதாக பதில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், மனித உரிமை பேரவையில் உள்ள இலங்கைக்கு ஆதரவான சில நாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், மனித உரிமை பேரவையிலுள்ள அங்கத்துவ நாடுகள் 2,3 வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றப்பட்டு புதிய நாடுகள் நியமிக்கப்படும்.

மனித உரிமை துறையில் இலங்கை பாரிய முன்னேற்றம் அடைந்து வருகிறது. மார்ச் மாதமே அடுத்த மாநாடு நடைபெறவுள்ளது.

கடந்த மீளாய்வு மாநாட்டில் எமது தரப்பு, தேவையான விடயங்களை சமர்ப்பித்தது.

மனித உரிமை தொடர்பில் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது. நாம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.

இதேவேளை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சீனா, ரஷ்யா மற்றும் கியூபா போன்ற இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அங்கத்துவ மாற்றம் பெற்ற நாடுகளின் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக